புதுக்கோட்டை மாவட்ட நூர்பாலை லிட், இளநிலை உதவியாளர் & மின் பொறியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்ட நூர்பாலை லிட், இளநிலை உதவியாளர் & மின் பொறியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 

புதுக்கோட்டை மாவட்ட நூர்பலையில் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்களை நேரடி நியமனம் மூலமாக பணியமர்த்துவதற்கு கீழ்காணும் விவரப்படி தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 14/03/2020 முதல் 31/03/2020 வரையில் வரவேற்கப்படுகின்றன.

 

காலிப்பணியிடம் 

 

வ.எண்பதவியின் பெயர்காலிப்பணியிடம்
01.இளநிலை உதவியாளர்05
02.மின் பொறியாளர்01

 

கல்வித்தகுதி

 

வ.எண்பதவியின் பெயர்கல்வித்தகுதி
01.இளநிலை உதவியாளர்அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
02.மின் பொறியாளர்அங்கீகரிக்கப்பட்ட பலக்லைக்கழகத்தில் இளநிலை பொறியியல் மின்னியல் பட்டம் அல்லது இளநிலை பொறியியல் மின்னியியல் மற்றும் மின்னணுவியல் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  2 வருடம் முன் அனுபவம் மின் ஆய்வது துறையால் வழங்கப்பட்ட ‘சி’ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் 

 

வ.எண்பதவியின் பெயர்சம்பளம்
01.இளநிலை உதவியாளர்ரூ.5200-20200/- (GP-2400/-)
02.மின் பொறியாளர்ரூ.9300-34800/- (GP-4200/-)

 

வயது வரம்பு 

 

இளநிலை உதவியாளர் மற்றும் மின் பொறியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இன வாரியாக அரசு விதிமுறைப்படி பின்பற்றப்படும்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள், நிர்வாகக் காரணங்களினால் பணியிழப்புக்குரியவர்கள் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் ஆகியோரும் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பதாரர்கள் அரசாணைப்படியுள்ள இட ஒதுக்கீடு இன சுழற்சி முறை மற்றும் முன்னுரிமை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வுக்குழுமம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

 

முக்கிய தேதிகள் 

 

  1. விண்ணப்பங்களை பெறுவதற்கும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விண்ணப்பிக் கட்டணத்துடன் சமர்பிப்பதற்கும் ஆரம்ப நாள் 14/03/2020
  2. விண்ணப்பங்களை பெறுவதற்கும் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க கட்டணத்துடன் சமர்பிப்பதற்கும் கடைசி நாள் 31/03/2020

 

அதிகாரபூர்வ அறிவிப்பு – கிளிக் செய்யவும்.

 

இது தொடர்பான கூடுதல் விவரங்களை இலவசமாக விநியோகிக்கப்படும் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள விளக்கக்குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.