டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம்

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம்: Dr.Muthulakshmi Reddy Ninaivu Intercaste Scheme

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம்
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம்

திட்டத்தின் நோக்கம்

 

சமுதாயத்தில் இனப்பாகுபாட்டைக் களைந்து சமநிலையை உருவாக்குதல்.

 

வழங்கப்படும் உதவி

 

திட்டம் 1

ரூ.25,000 – வழங்கப்படுகிறது. (இதில் ரூ.15,000 –காசோலையாகவும் ரூ.10,000 தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும்) மற்றும் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயம் வழங்கப்படும்.

திட்டம் 2

ரூ50,000 – வழங்கப்படுகிறது (ரூ.30,000 –காசோலையாகவும் ரூ.20,000 – தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயம்.

திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்

கீழ்க்கண்ட இரண்டு வகையான கலப்புத் திருமணங்கள் நிதியுதவி பெற தகுதியானவை

 

பிரிவு 1: புதுமணத் தம்பதியரில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினராக இருந்து பிற இனத்தவரை மணந்து கொண்டால் நிதியுதவி வழங்கப்டும்.

 

பிரிவு 2:புதுமணத் தம்பதியரில் ஒருவர் முற்பட்ட வகுப்பினராகவும் மற்றொருவர் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந்தால் நிதியுதவி வழங்கப்படும்.

 

பொது

 

  1. வருமான வரம்பு ஏதும் இல்லை
  2. திருமணத் தேதியன்று மணமகளின் வயது 18 பூர்த்தி அடைந்திருத்தல் வேண்டும். உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை.
  3. திருமணத் தேதியன்று மணப்பெண் 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை.

 

சமர்ப்பிக்க வேண்டிய சான்றுகள்

 

திட்டம் 1

 

  1. திருமணப் பத்திரிகை அல்லது திருமண பதிவுச் சான்று
  2. மணமகன் மற்றும் மணமகளின் சாதிச் சான்று
  3. மணப்பெண்ணின் வயதுச் சான்று.

 

திட்டம் 2

பட்டப்படிப்பு படித்தவர்கள் கல்லூரிகள் தொலைதூரக் கல்வி அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்த வெளி பல்கலைக் கழகங்களில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ்களின் நகல் மற்றும் பட்டயப் படிப்பு படித்தவர்கள் தமிழக அரசின் தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி
நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்ற சான்றிதழ்களின் நகல்.

 

விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு

 

  • திருமணம் முடிந்து 2 வருடங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • தொடர்பு அலுவலரின் பதவி –மாவட்ட சமூகநல அலுவலர்கள்

Detailed Notification Link – CLICK HERE