மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம்: Moovalur Ramamirtham Ammaiyar Ninaivu Marriage Assistantce Scheme

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம்
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம்

வழங்கப்படும் உதவி

 

திட்டம் 1:ரூ.25,000 – காசோலை மற்றும் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயம்

 

திட்டம் 2:ரூ50,000 – காசோலை மற்றும் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயம்.

 

திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்

 

திட்டம் 1

1. மணப்பெண் 10-ஆம் வகுப்பு பள்ளியில் படித்து தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருக்க வேண்டும்.

2. தனியார் தொலைதூரக் கல்வி மூலம் படித்து இருந்தால் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும்

3. பழங்குடியினராக இருந்தால் 5-வது படித்திருத்தல் வேண்டும்.

 

திட்டம் 2

1. பட்டதாரிகள் கல்லிலூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழங்களிலோ படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.

2. பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்கநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

 

பொது

 

 1. குடும்ப ஆண்டு வருமானம் 72,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
 2. ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித் தொகை வழங்கப்படும்.
 3. திருமணத் தேதியன்று மணமகளுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை.

 

சமர்ப்பிக்க வேண்டிய சான்றுகள்

 

 1. பள்ளி மாற்றுச் சான்று நகல்
 2. மதிப்பெண் பட்டியல் நகல். பத்தாம் வகுப்பு திட்டம் – 1
 3. பட்டப்படிப்பு பட்டயப்படிப்பு தேர்ச்சி சான்று நகல் திட்டம் – 2
 4. வருமானச் சான்று
 5. திருமண அழைப்பிதழ் (திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்)

 

விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு

 

 1. திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்கலாம்.
 2. சிறப்பு நேர்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால் திருமணத்திற்கு முதல் நாள் வரை விண்ணப்பிக்கலாம்,
 3. தொடர்பு அலுவலரின் பதவி -மாவட்ட சமூகநல அலுவலர்கள்

 

Detailed Notification Link-CLICK HERE