முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்புத் திட்டம் சார்பான விவரங்கள்

முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்புத் திட்டம் சார்பான விவரங்கள்: Details regarding the Chief Minister’s Girl Child Protection Scheme

முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்புத் திட்டம் சார்பான விவரங்கள்
முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்புத் திட்டம் சார்பான விவரங்கள்

நோக்கம்:

 

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான பொருள்வளம் போல், மனித வளத்தை மேம்படுத்த குழந்தைகளின் மேம்பாடும் முக்கியமானது என்பதால் குழந்தைகளைப் பாதுகாத்து பராமரிப்பதைக் கருத்தில் கொண்டு சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை குழந்தைகளின் பாதுகாப்பு, நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக குறிப்பாக பெண்குழந்தைகளுக்கு என முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தினை சென்னை மாவட்டத்தில் சமூகநல அலுவலகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

திட்டம் 1

இத்திட்டத்தின் கீழ் 01.08.2011 அன்றோ அல்லது பிறகோ பிறந்து, குடும்பத்தில் ஒரே பெண் குழந்தை மட்டும் இருப்பின் அப்பெண் குழந்தையின் பெயரில் நிலையான வைப்புத் தொகையான ரூ.50,000/- தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு அந்நிறுவனத்தின் மூலம் இரசீது பெண் குழந்தையின் பெயரில் வழங்கப்படுகிறது.

 

  • -> 1 பெண் குழந்தை 01.08.2011 க்கு முன்பு பிறந்த குழந்தை எனில் ரூ.25,000/-
  • -> 1 பெண் குழந்தை 01.08.2011 க்கு பின்பு பிறந்த குழந்தை எனில் ரூ.50,000/-

 

மேற்படி வைப்புத் தொகை ஒவ்வொரு ஐந்தாண்டிலும் புதுப்பிக்கப்பட்டு, 18 வயது நிறைவடைந்ததும், அப்போதைக்குரிய திரண்ட வட்டி விகிதத்துடனும், கல்வி ஊக்கத் தொகையுடனும் கூடிய முதிர்வுத் தொகை அக்குழந்தைகளுக்கு மேற்கண்ட நிறுவனத்திடமிருந்து காசோலையாக பெறப்பட்டு அக்குழந்தைகளுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் வழங்கப்படும்.

 

திட்டம் 2

 

இத்திட்டத்தின் கீழ் 01.08.2011 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்து, குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருப்பின் ஒவ்வொரு பெண் குழந்தையின்பேரிலும் நிலையான வைப்புத் தொகையாக தலா ரூ.25,000/- தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு அந்நிறுவனத்தின் மூலம் இரசீது நகல், பெண் குழந்தைகளின் பெயரில் வழங்கப்படும்.

 

மேற்படி வைப்புத் தொகை ஒவ்வொரு ஐந்தாண்டு முடிவிலும் புதுப்பிக்கப்பட்டு 18 வது நிறைவடைந்ததும், அப்போதைக்குரிய திரண்ட வட்டி விகிதத்துடன், கல்வி ஊக்கத் தொகையுடனும் கூடிய நிலை வைப்புத் தொகையின் முதிர்வுத் தொகை அக்குழந்தைகளுக்கு மேற்கண்ட நிறுவனத்திடமிருந்து காசோலையாக பெறப்பட்டு அக்குழந்தைகளுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் வழங்கப்படும்.

  • -> 01.08.2011 க்கு பின்பு பிறந்த குழந்தைகள் எனில் தலா ரூ. 25,000/-

 

திட்டம் 3

 

இத்திட்டத்தின் கீழ் முதல் பிரசவத்தில் 1 பெண்குழந்தையும், இரண்டாவது பிரசவத்தில் 2 பெண் குழந்தைகளும் பிறந்தால், தலா 1 குழந்தைக்கு ரூ. 25,000/- வீதம் தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு அந்நிறுவனத்தின் மூலம் இரசீது நகல், பெண் குழந்தைகளின் பெயரில் வழங்கப்படும்.

 

மேற்படி வைப்புத் தொகை ஒவ்வொரு ஐந்தாண்டு முடிவிலும் புதுப்பிக்கப்பட்டு 18 வது நிறைவடைந்ததும், அப்போதைக்குரிய திரண்ட வட்டி விகிதத்துடன்,கல்வி ஊக்கத் தொகையுடனும் கூடிய நிலை வைப்புத் தொகையின் முதிர்வுத் தொகை அக்குழந்தைகளுக்கு மேற்கண்ட நிறுவனத்திடமிருந்து காசோலையாக பெறப்பட்டு அக்குழந்தைகளுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் வழங்கப்படும்.

  • -> 01.08.2011 க்கு பின்பு பிறந்த குழந்தைகள் எனில் தலா ரூ.25,000/-

 

தகுதிகள்

 

  1. பெற்றோரில் ஒருவர் 35 வயதிற்குள் அரசாங்க மருத்துவமனையில் கருத்தடை செய்ததற்கான சான்று அளிக்க வேண்டும்.
  2. பெண் குழந்தை மட்டுமே இருக்க வேண்டும். ஆண் வாரிசு இருக்கக் கூடாது.
  3. வருமானச் சான்று ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும்.
  4. இரண்டாவது குழந்தைக்கு 3 வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 

Detailed Notification Link-CLICK HERE